உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயிலில் கடத்தி வரப்பட்ட எட்டு கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட எட்டு கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை; ரயிலில் கடத்திவரப்பட்ட எட்டு கிலோ கஞ்சாவை, கோவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று மேற்கு வங்கம், சாலிமரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், கோவை ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பின்பக்க பொது ஜன பெட்டியில், கழிவறை அருகில் 'டிராவல் பேக்' ஒன்று கேட்பாரற்று இருந்து.சந்தேகம் அடைந்த போலீசார், பேக்கை திறந்து பார்த்த போது, அதில் எட்டு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, ரயில்வே போலீசார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ