உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே லாரி மோதி முதியவர் பலியானார். மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 95. இவர் உருளைக்கிழங்கு மண்டிகள் இருக்கும் நெல்லித்துறை சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வினோத்குமார், லாரி ஓட்டுநர், தனது லாரியை பின்னோக்கி எடுத்தார். இதில் ராமசாமி மீது லாரி மோதியது. நிலைதடுமாறிய அவர் லாரியின் பின் சக்கரத்தில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராமசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை