உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.29 லட்சத்தை இழந்த முதியவர்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.29 லட்சத்தை இழந்த முதியவர்

கோவை; கோவை, துடியலுார் பகுதியை சேர்ந்தவர் சபாபதி, 69. இவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த செப்., 24ம் தேதி மர்ம நபர் ஒருவர் அழைத்தார். அவர் தன்னை, மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார்.மும்பையில் நடந்த பண மோசடி வழக்கில், நரேஸ் கோயல் என்பவரை மும்பை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகளில், சபாபதியின் பெயரில் ஒரு ஏ.டி.எம்., கார்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால், பண மோசடி வழக்கி சபாபதிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து, போலீசார் சபாபதியை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாகவும், சபாபதியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.சபாபதியின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை,தான் அளிக்கும் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வு முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என கூறியுள்ளார்.இதனால், செப்., 24ம் தேதி முதல் நவ., 22ம் தேதி வரை, பல்வேறு தவணைகளில் ரூ. 22 லட்சத்து 79 ஆயிரத்து 200 பணத்தை, மோசடி நபர் கொடுத்த வங்கி கணக்குகளுக்குஅனுப்பினார். அதன் பின் மர்ம நபரை, தொடர்பு கொள்ள முடியவில்லை. மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை