உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குளிர்காலத்தில் முதியோரே கவனம்

 குளிர்காலத்தில் முதியோரே கவனம்

அவ்வப்போது சில்லென காற்றும், துாறல் மழையும் சூழலை அழகாக்கினாலும், முதியோர் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். இதுபோன்ற சமயங்களில் முதியோர் செய்யவேண்டியது என்ன n குளிர்காலங்களில் பொதுவாக சருமம் சுருங்கி வறண்டு போகும், உதடுகள், பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவர் பரிந்துரைப்படி கிரீம்களை பயன்படுத்தலாம். n 50 வயதை கடந்தவர்கள் நிமோனியா தடுப்பூசி எடுத்துக்கொண்டால், தேவையற்ற தொற்று பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம். n பொதுவாக இதுபோன்ற சமயங்களில், தாகம் அதிகம் அடிக்காது. தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மலச்சிக்கல், உடல் சோர்வு, நீர் இழப்பு போன்றவை ஏற்படும். கண்ணில் படும் படி தண்ணீர் நிரப்பி பாட்டில்களை வைத்துக்கொள்ள வேண்டும். n வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் காலணிகள் அணிவது நல்லது. தினமும் பயன்படுத்தும் போர்வை, படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைப்பதும், மாற்றிக்கொள்வதும் அவசியம். n கோடைக்காலம் துவங்கும் வரை, அதிகாலையில் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து, லேசாக சூரியன் எட்டிப்பார்த்ததும் செல்வது நல்லது. n சூடான நீரில் குளிப்பதால் இதமாக இருக்கும் இருப்பினும், சரும பாதிப்புகள் ஏற்படும் என்பதால், வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும். n சத்தான உணவு எடுத்துக்கொள்வதுடன்; தேவையற்ற உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை