மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
22 hour(s) ago
அன்னுார்: கோவை அருகே தி.மு.க., ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட, 80 வயது மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், சில மாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது. இதை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், கோவை மாவட்டம், அன்னுார் அருகே ஒட்டர்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன், நேற்று வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஒன்றிய செயலர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, '100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே, மத்திய அரசே நிதியை குறைக்காதே, புதி ய நிபந்தனைகளை வாபஸ் பெறு' என, கோஷம் எழுப்பினர். அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தவர்களில் மேகிணறு பிரிவை சேர்ந்த நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளியான மூதாட்டி பொன்னம்மாள், 80, என்பவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட மற்றவர்கள், தங்கள் ஊராட்சிகளுக்கு வாகனங்களில் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். மூதாட்டியின் மகன் வேலுச்சாமி, 55, புகாரில், அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: அன்னுாரில் தி.மு.க., ஆர்ப்பாட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட மூதாட்டி பொன்னம்மாள், கொளுத்தும் வெயிலில் நின்றதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், கோபமும் அளிக்கிறது. தி.மு.க., ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை என்றால், 100 நாள் வே லைத்திட்ட ஊதியம் தர முடியாது என மிரட்டி, பல பகுதிகளில் இருந்து முதியவர்களை வாகனங்களில் அழைத்து வருவது தி.மு.க.,வின் வழக்கம். தி.மு.க.,வின் அரசியல் லாபத்துக்காக ஏழை, எளிய மக்களின் உயிர்களை பழி வாங்கும் அராஜக அரசியலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. ஒரு உயிரிழப்புக்கு காரணமான தி.மு.க., அன்னுார் வடக்கு ஒன்றிய செயலர் பழனிசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதி ல் தெரிவித்துள்ளார்.
22 hour(s) ago