உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்கம்பம் சாய்ந்தது; பொதுமக்கள் ஷாக்

மின்கம்பம் சாய்ந்தது; பொதுமக்கள் ஷாக்

போத்தனுார்; மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட மதுக்கரை கடை வீதியில் விக்னேஷ் மெடிக்கல்ஸ் உள்ளது. நேற்று முன்தினம் மதியம், 2.45 மணியளவில், கடையின் முன்புள்ள மின் கம்பம் ரூபிங் ஷீட் மீது சாய்ந்தது. மின் கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டது. மின்வாரியத்துக்கு தகவல் தரப்பட்டதும், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பிகள் அகற்றப்பட்டு, புதிய கம்பம் நடப்பட்டது. கடை வீதி, தண்டபாணி தோட்டம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இரவு 8.15 மணி வரை, மின் வினியோகம் தடைபட்டது. சமூக ஆர்வலர் ஷோபன் கூறுகையில், ''சாய்ந்த மின்கம்பம் 15 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இரும்பு கம்பம் துருப்பிடித்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பம் சேதமடைந்ததால், சாய்ந்து விட்டது. இவ்வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கம்பம் சாலையில் விழுந்திருந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். நகராட்சி முழுவதும் பெரும்பான்மையான மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றை ஆய்வு செய்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !