உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்

மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் 12வது ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். சம்மேளனம் மாநில பொருளாளர் கோபால், துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும், விரைவில் பணப்பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை சங்க செயலாளர் வசந்தகுமார், தலைவர் மோகன், திருப்பூர் சங்க செயலாளர் ஜோசப்ரெஜிஸ், சிறப்பு ஆலோசகர் ரகோத்தமன், பொள்ளாச்சி சங்க பொருளாளர் ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை