உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி பண்டிகை தினத்தன்று மின் தேவை 50 சதவீதம் சரிவு 

தீபாவளி பண்டிகை தினத்தன்று மின் தேவை 50 சதவீதம் சரிவு 

கோவை: கோவை மெட்ரோ எல்லைக்குள் தீபாவளி தினத்தன்று, மின் நுகர்வு 50 சதவீதம் குறைந்து இருந்தது. வழக்கமாக கோவை நகர் பகுதியில், 335 முதல் 400 மெகாவாட் வரை மின் நுகர்வு இருக்கும். கடந்த, 10ம் தேதி 400 மெகாவாட் அதாவது, 82.4 லட்சம் யூனிட் மின் நுகர்வு இருந்தது. கடந்த, 19ம் தேதி மின்நுகர்வு, 240 மெகாவாட் என்ற அளவில் குறைந்து இருந்தது. தீபாவளி தினத்தன்று, 200 மெகாவாட் மட்டுமே மின்நுகர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காரணமாக, தொழிற்சாலைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், கல்விநிறுவனங்கள் என அனைத்தும் விடுமுறையில் இருந்தன. பலர் சொந்த ஊருக்கு சென்றதால், மின் தேவை கணிசமாக குறைந்து காணப்பட்டது. கோவை நகர் பகுதி மேற்பார்வை பொறியாளர் சதிஸ்குமார் கூறுகையில், ''கோவை நகர் பகுதியில் 18 துணை மின்நிலையங்கள் உள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு, 350-365 மெகாவாட் மின் தேவை இருக்கும். கடந்த, 10ம் தேதி 400 மெகாவாட் (82.4 லட்சம் யூனிட்) தேவை இருந்தது. தீபாவளி தினத்தன்று, 200 மெகாவாட் அதாவது 43.1 லட்சம் யூனிட் மட்டுமே தேவை இருந்தது. பண்டிகை காரணமாக, 50 சதவீத தேவை குறைந்து காணப்பட்டது. நேற்றைய தினம், 240 மெகாவாட் (49 லட்சம் யூனிட்) தேவை இருந்தது. நாளை (இன்று) மீண்டும் வழக்கம் போல் மின்நுகர்வு அதிகரிக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி