உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர்களுக்கு பகலில் நீர் பாய்ச்சுங்கள் மின்சாரத்துறை வேண்டுகோள்

பயிர்களுக்கு பகலில் நீர் பாய்ச்சுங்கள் மின்சாரத்துறை வேண்டுகோள்

சோமனுார் ; ''பகலில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில், பயிர்களுக்கு பகலில் நீர் பாய்ச்ச அனைத்து விவசாயிகளும் முன் வரவேண்டும்,'' என, மின் பகிர்மான கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மின் பகிர்மான கழக கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் அறிக்கை :பகலில் கிடைக்கும் புதுப்பிக்கப்பட்ட இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும், சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். மற்ற வளங்களை கொண்டு மின் ஆற்றலை தயாரிக்கும் போது, ஏற்படும் மாசுபாட்டின் அளவும் குறையும். இதன்மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.அதனால், கோவை மின் பகிர்மான வட்டம், தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் நேரத்தை, பகல் நேரத்துக்கு மாற்றி கொள்ள வேண்டுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ