உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரத்தை சாய்த்த பாகுபலி யானை

மரத்தை சாய்த்த பாகுபலி யானை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்து, மரத்தை சாய்த்த பாகுபலி யானையால் பரபரப்பு ஏற்பட்டது.மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை சாலையில் அமைந்துள்ள நந்தவன புதுார் பகுதியில், தனி நபர் தோட்டத்தில் நேற்று அதிகாலை புகுந்த பாகுபலி யானை, அங்குள்ள சவரி மரத்தை தாக்கி சேதப்படுத்தியது. இதில் அந்த மரம் சாய்ந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் கான்கிரீட் மேற்கூரை மட்டும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தோர் உயிர் தப்பினர். மரம் விழுந்ததில் 2 மின் கம்பங்களும் சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை