உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி நீக்கம் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நீக்கம் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அன்னுார்: ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி பொறியாளரை, மாவட்ட கலெக்டர் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார். இதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் கோரிக்கையை விளக்கி பேசினார். வட்டாரத் தலைவர் பிரபுராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகளின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை