மேலும் செய்திகள்
இனிதாக கழியட்டும் இன்றைய நாள்
20-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை, பொள்ளாச்சி எச்.ஆர்., பார்ம் சார்பில், இலவச வேலைவாய்ப்பு முகாம், நாளை, 2ம் தேதி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையும், ஐ.டி.ஐ., டிப்ளோமா, யு.ஜி., பி.ஜி., படித்தவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். வேலை தேடுபவர்களுக்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். அனுமதி இலவசம் என முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
20-Jul-2025