உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மரங்களில் அத்துமீறி விளம்பரம்

 மரங்களில் அத்துமீறி விளம்பரம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் இருக்கும் மரங்களில் ஆணி அடித்து விளம்பரங்கள் வைகப்படுவதால், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு ஆர்.எஸ்., ரோட்டில் இரு பகுதிகளிலும், அதிகளவில் கடைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம், பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர். இந்நிலையில், கடை வைத்திருப்பவர்கள் சிலர், ரோட்டோரத்தில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் வைத்துள்ளனர். விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை மரங்களில் ஆணி அடித்து கயிறு கட்டி தொங்கவிடப்பட்டு வியாபாரம் செய்கின்றனர். இது மட்டுமின்றி தனியார் விளம்பர பிளக்ஸ்களும் மரங்களில் உள்ளன. இதனால் மரத்தின் தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. வியாபார நோக்கத்துக்காக, மரங்களில் ஆணி அடிக்கப்பட்டிருப்பது இயற்கை ஆவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆர்.எஸ்.ரோடு பகுதியில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டோரம் ஆக்கிரமிப்பை மீண்டும் நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை