உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாரமேடு ரோட்டில் ஆக்கிரமிப்பு; பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து

சாரமேடு ரோட்டில் ஆக்கிரமிப்பு; பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து

கோவை; கரும்புக்கடை சாரமேடு பகுதியில், ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் ரஹமத்துல்லா கொடுத்த மனு:கோவை, 86வது வார்டு கரும்புக்கடை, சாரமேடு 80 அடி ரோட்டின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும், இடையூறு ஏற்படுகிறது.சாரமேடு மெயின் ரோட்டில் ஒரு மாநகராட்சி பள்ளி, நான்கு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிக்கு குழந்தைகள் வந்து செல்லும் நேரத்தில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், சாலையோர ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி