உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஷ்வன்கர் பள்ளியில் கலைக்களஞ்சிய விழா

விஷ்வன்கர் பள்ளியில் கலைக்களஞ்சிய விழா

கோவை; மாதம்பட்டி, விஷ்வன்கர் பப்ளிக் பள்ளியில், மாணவர்களின் தனித் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கலைக்களஞ்சிய விழா நடந்தது. பள்ளி தாளாளர் சங்கீதா தலைமை வகித்தார். நீலகிரி வரையாடு திட்ட உதவியாளர் ராகிணி, வி.எல்.பி. ஜானகி யம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சங்கீதா, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். துவக்கப்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், மழலையர்களின் நகைச்சுவை கலந்தஉரையாடல்அனைவரையும் கவர்ந்தது. 'வேர்கள் முதல் பாதைகள் வரை' என்ற தலைப்பில், மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த கற்பனை படைப்புகளை, விருந்தினர்கள் பாராட்டினர். போட்டிகளில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி, மாணவர்கள் பரிசுகளை அள்ளினர். பள்ளியின் இயக்குனர் கதிர்வேல், தலைமையாசிரியை பிருந்தா, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை