உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொறியாளர் கிரிக்கெட்; கோவையில் துவக்கம்

பொறியாளர் கிரிக்கெட்; கோவையில் துவக்கம்

கோவை;சிவில் பொறியாளர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி சூலுார் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.'தி இந்தியா சிமென்ட் நிறுவனம்' சார்பில் சிவில் பொறியாளர்களுக்கான 2ம் ஆண்டு ஐ.சி.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடக்கிறது. போட்டியை சூலுார் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி துவக்கி வைத்தார். சிவில் இன்ஜி., கூட்டமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ், இந்தியா சிமென்ட் மார்க்கெட்டிங் துறை மாநில தலைவர் இனியவன் ஆகியோர் உடனிருந்தனர்.கோவை மண்டலத்தில், கோவை, உடுமலை, தாராபுரம், கோபி, சத்தியமங்கலம், சேலம் ஆகிய ஆறு அணிகள் போட்டியிடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி சென்னையில் நடக்கும் கால் இறுதி சுற்றுக்குதகுதிபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ