உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு கோவை மாவட்ட மைய கூட்டம்

இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு கோவை மாவட்ட மைய கூட்டம்

கோவை: கட்டட பொறியாளர்களுக்காக அமைக்கப்பட்ட மாநில அளவில் செயல்படும் இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு சங்கத்தின், கோவை மாவட்ட மையத்தின், நிதியாண்டின் இரண்டாவது கூட்டம் நடந்தது. கோவை மாவட்ட துணைத் தலைவர் பூபதி வரவேற்றார். மாவட்ட தலைவர் துாயமணி தலைமை மற்றும் மாநில தலைவர் செல்வத்துரை முன்னிலை வகித்தனர். கட்டுமான தொழிலில் தற்போது நிலவி வரும் தேக்க நிலை, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கட்டுமான தொழிலில் எதிர்காலம், கட்டுமான தொழில் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுய சான்று கட்டட அனுமதி முறையில், 7,500 சதுரடி இடத்தில் 10 மீ., உயரத்துக்கு உட்பட்ட 5,000 சதுரடி அளவில் பசுமை மற்றும் வெள்ளை குறியீட்டுடன் கூடிய தொழிற்சாலை கட்டடங்கள் கட்டட அனுமதி பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த கோவை மாவட்டத்தின் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ள இத்திட்டத்தை வரவேற்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை