உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுதுளிக்கு சுற்றுச்சூழல் மேம்பாட்டு விருது

சிறுதுளிக்கு சுற்றுச்சூழல் மேம்பாட்டு விருது

கோவை: கோவை சிறுதுளி அமைப்புக்கு, சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிக்கான, 'சோசியல் இம்பாக்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.சி.எஸ்.ஆர்., யுனிவர்ஸ் சார்பில், 4வது சமூக மாற்றத்துக்கான மாநாடு (சோசியல் இம்பாக்ட் கான்பிரன்ஸ்) டில்லியில் நடந்தது. இம்மாநாட்டில், நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருது, சிறுதுளி அமைப்புக்கு வழங்கப்பட்டது.சிறுதுளி, ஏஎம்எம் அறக்கட்டளை மற்றும் இஐடி பாரி ஆகிய அமைப்புகளுடன் இணைந்து புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், நன்னீர் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், கன்மாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. நிலத்தடி நீர் சுமார் 100 அடியில் நிலத்தடி நீர் மட்டம் இருந்த போதிலும், அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. காரணம், அது உப்பு நீராக உள்ளது. எனவே விவசாயத்திற்கு கன்மாய்கள், முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.ஏஎம்எம் அறக்கட்டளை, இஐடி பாரி மற்றும் சிறுதுளி இணைந்து கண்மாய்களை கண்டறிந்து கரைகளை பலப்படுத்தி, கொள்ளளவை அதிகப்படுத்தி வருகிறது.இதனால் ஒரு போகம் பயிர் செய்த விவசாயிகள், ஆண்டுக்கு மூன்று போகம் விவசாயம் செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளனர்.இது போல் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களிலும், நீர் நிலைகளை மீட்டெடுக்கும் நன்னீர் திட்டத்தில், சிறுதுளி செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதுவரை 18 நீர் நிலைகளை மீட்டெடுத்து, 2000 மில்லியன் லிட்டருக்கு மேல், சேமிப்பு திறனை அதிகப்படுத்தி உள்ளது. இதனால், 21 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.இந்த சமூக மாற்றத்துக்கான பணியை ஆய்வு செய்த, சி.எஸ்.ஆர். யுனிவர்ஸ், இந்த தேசிய அளவிலான விருதினை, சிறுதுளி அமைப்புக்கு வழங்கியுள்ளது.டில்லியில் நடந்த, சி.எஸ்.ஆர்., யுனிவர்ஸ் சமூக மாற்றத்துக்கான மாநாட்டில், சிறுதுளிக்கு விருது வழங்கப்பட்டது.சிறுதுளி அமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை