சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் கல்லார் இ-- பாஸ் சோதனை சாவடியில், கோவையில் உள்ள கதிர் பொறியியல் கல்லுாரி மேலாண்மை துறை மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமை, பசுமையை உருவாக்குதல், மரம் வளர்த்தல், அதனை பாதுகாத்தல் போன்ற வழிமுறைகளை எடுத்துரைத்தனர். இதில் மேட்டுப்பாளையம் வனத்துறை வனவர் சிங்காரவேலு, கல்லுாரி மேலாண்மை துறை இயக்குனர் குணசேகரன், பேராசிரியர்கள் கருணாகரன், பிரகாஷ், கண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ----