இ.பி.எப்.ஓ., அலுவலகம் பொள்ளாச்சியில் இடமாற்றம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தேர்நிலையம் பகுதியில், செயல்படும் மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் பல்லடம் ரோடு மகாலட்சுமி நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, தேர்நிலையம் பகுதியில், மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த அலுவலகம், பல்லடம் ரோடு மகாலட்சுமி நகர் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. நாளை (1ம் தேதி) முதல் புதிய அலுவலகத்தில் செயல்படவுள்ளது.எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள், மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை 'மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மகாலட்சுமி நகர், பல்லடம் ரோடு, பொள்ளாச்சி- 642001' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மண்டல கமிஷனர் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளார்.