மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி
27-Nov-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை எம்.எல்.ஏ., தாமோதரன் வழங்கினார்.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி நிதியில், பள்ளிக்கு, 6.25 லட்சம் மதிப்பிலான, ஆய்வக உபகரணங்கள் மற்றும் 75 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் என, 7 லட்சம் மதிப்பீட்டிலான பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.எம்.எல்.ஏ., தாமோதரன் பேசுகையில், ''மாணவர்கள் அனைவரும் நன்கு கல்வி கற்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி எப்படி முக்கியமோ, அதேபோன்று விளையாட்டும் முக்கியம். இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.பள்ளி படிப்பை முடித்து, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் போது, கல்வி வழங்கிய பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மறவாமல் இருக்க வேண்டும்,'' என்றார்.
27-Nov-2024