ஈரோடு - கோவை மெமு ரயில் நேரம் மாற்றம்
கோவை; ஈரோடு - கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயில் நேரம் மாற்றப்படுகிறது.வழக்கமாக காலை 7:50 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், இனி 5 நிமிடங்கள் முன்னதாக, 7:45 மணிக்கு புறப்படும். தொட்டியபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் ரோடு, இருகூர் வரை வழக்கமான நேரத்தை விட 5 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.சிங்காநல்லூருக்கு 6 நிமிடம் முன்னதாக, 9:28க்கும், பீளமேடுக்கு 8 நிமிடங்கள் முன்னதாக, 9:33 மணிக்கும், கோவை வடக்கு 9:41, கோவைக்கு 10:10 மணிக்கும் வந்தடையும் இந்த நேர மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.