ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் திறப்பு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் வசதிக்காக அமைத்துள்ள லிப்ட்டுகள், எஸ்க்லேட்டர்கள், நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த, மத்திய அரசு, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. பயணிகள் எளிதில் பிளாட்பாரதிற்கு செல்ல, இரண்டு எஸ்க்லேட்டர்களும், இரண்டு லிப்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்க்லேட்டரையும், லிப்ட் இயக்கத்தையும், நேற்று மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, திறந்து இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டேஷன் மாஸ்டர் கார்த்திகேயன், பொறியாளர்கள் ஜிதின், அலி, சூப்பர்வைசர் கணபதி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.