உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கணும்

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கணும்

கோவை; ரத்தினம் கல்விக் குழுமங்களில் சேர்ந்த, முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா, 'அனுக்ரகா' என்ற பெயரில் நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசுகையில், '' தன்னம்பிக்கை மிக்க மனிதனே, வாழ்வில் அனைத்து தடைகளையும் கடந்து வெற்றி அடைகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் லட்சியம் வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி,தினந்தோறும் பயணிக்க வேண்டும்,'' என்றார்.''கல்லுாரியின் முதல் நாளில் இருந்தே, பல்வேறு திறன்களை மாணவர்கள் கற்கும் வகையில் அறிவுப்பட்டறை நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என, ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தெரிவித்தார்.ரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா, செயல் அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி நாகராஜ், ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் கீதா, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி