மேலும் செய்திகள்
'யாரக் கேட்டு வார்டுக்குள்ள வந்தே...?'
12-Nov-2024
போத்தனூர்: கோவை, குனியமுத்தூரில் மாநகராட்சியின், 87, 88வது வார்டுகளில், செங்குளம் நிரம்பியதால் ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கியது.குறிப்பாக கே.ஜி.கே., சாலை மற்றும் குறிஞ்சி நகர் பகுதிகளில் இப்பாதிப்பு அதிகளவு உள்ளது.இந்நிலையில் நேற்று கே.ஜி.கே., சாலை பகுதியை இத்தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி பார்வையிட்டார். தொடர்ந்து செங்குளத்திலிருந்து வரும் கொப்பு வாய்க்காலை ஆய்வு செய்தார்.அப்போது ஒரு இடத்தில் வாய்க்காலில் அடைப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக இரு பொக்லைன் வாகனங்களை வரவழைத்து அடைப்பை அகற்றச் செய்தார். மூன்று மணி நேரத்தில் அடைப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து தேங்கியிருந்த நீர் அங்குள்ள ராமலிங்கம் எனும் விவசாயியின் தென்னந்தோப்பிற்குள் விடப்பட்டது. குனியமுத்தூர் நகர அ.தி.மு.க., செயலாளர் மதனகோபால் கூறுகையில், ''செங்குளத்திலிருந்து பாலக்காடு சாலைக்கு வரும் கொப்பு வாய்க்கால் அ.தி.மு.க.. ஆட்சியில் தூர் வாரபட்டது. தற்போது ஓரிடத்தில் வாய்க்காலில் அடைப்பு இருந்தது. அந்த அடைப்பை முன்னாள் அமைச்சர் வேலுமணி பார்வையிட்டு தனது சொந்த செலவில் அகற்ற நடவடிக்கை எடுத்தார். இனி நீர் தேங்காது'' என்றார்.
12-Nov-2024