உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு

பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் பழைய குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் ஏதேனும் ஈடுபடுகிறார்களா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிவுரைப்படி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 26 பழைய குற்றவாளிகளை, கடந்த ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, அவர்களது நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும், அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவி வேண்டுமா எனவும் கேட்கப்பட்டது. தற்போது அவர்களது நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பழைய குற்றவாளிகள் எதாவது குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா. அவர்களது சிறை நண்பவர்கள் யாரவது மேட்டுப்பாளையம் வந்துள்ளனரா, அவர்கள் எதாவது குற்றசெயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை