உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் ரயில்வே பணிமனையில் ஆய்வு

போத்தனுார் ரயில்வே பணிமனையில் ஆய்வு

கோவை;போதனுாரில் உள்ள சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பணிமனையை தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு இன்ஜினியர் சாந்திராம் ஆய்வு செய்தார். அப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட மின்சாரத்தால் இயக்கப்படும் லிப்டிங் பேனலை துவக்கி வைத்தார். இந்த ஆய்வின் போது, போத்தனுார் சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பணிமனை மேலாளர் ராஜசேகரன் உடன் இருந்தார்.இதை தொடர்ந்து, போத்தனுார் பணிமனையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பங்கேற்றார். இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்