கற்பகத்தில் புத்தொழிலை ஊக்குவித்த கண்காட்சி
கோவை; கற்பகம் உயர்நிலை பல்கலை சார்பில், 'வாங்குபவர், விற்பவர் சந்திப்பு 1.0' கண்காட்சி நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிதி உதவியுடன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், டி.என்,ரைஸ் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, கோவை வேளாண் துணை இயக்குநர் மீனாம்பிகை, வேளாண்துறையில் வளர்ந்துவரும் சந்தை இயக்கவியல் குறித்து உரையாற்றினார். கோவை மாவட்ட மேம்பாட்டு மேலாளர் திருமலைராவ், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மேம்பாட்டு முயற்சிகள் குறித்துப்பேசினார்.கற்பகம் நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், கற்பகம் உயர்நிலை பல்கலையின் துணைவேந்தர் ரவி, தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப், பதிவாளர் காயத்ரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், கே.ஐ.ஐ.சி., மேலாளர் தனசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.