உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்பார்ப்பு

ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்பார்ப்பு

கோவை, ; கோவையில் நடந்த எம்.எஸ்.எம்.இ.,யின் ஜி.எஸ்.டி., கமிட்டிக் கூட்டத்தில், பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.புதிய ஜி.எஸ்.டி., பதிவு தொடர்பாக, மத்திய அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறையை எளிமையாக்க வேண்டும், ஜி.எஸ்.டி., குறித்த எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகளை தீர்க்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆன்லைன் வாயிலாக, கமிஷனர் உட்பட உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.சமாதான் திட்டம் கால நீட்டிப்பு செய்வது குறித்த கேள்விக்கு, அரசின் ஆய்வில் உள்ளதாக, ஜி.எஸ்.டி.,கமிஷனர் தினேக் ஷ்ராவ் பங்கர் கூறினார். கூட்டத்தில், பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை