உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி வளாகங்களில் புதர் அகற்ற எதிர்பார்ப்பு

பள்ளி வளாகங்களில் புதர் அகற்ற எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக, மழையின் தாக்கம் இருந்தது. மழையால், அரசு பள்ளி வளாகத்தில், தண்ணீர் தேக்கமடைந்து காணப்பட்டது. இதனால், மாணவ, மாணவியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேநேரம் பல பள்ளிகளில், வளாகத்திற்குள் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. கொசுக்களின் பெருக்கத்தால், மாணவ, மாணவியர் பாதிக்கின்றனர். அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தினர் வாயிலாக புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னார்வலர்கள் கூறுகையில், 'மழை காரணமாக, பள்ளி வளாகத்திற்குள் புதர் செடிகளின் வளர்ந்துள்ளன. கொசுக்கள் பெருக்கமடைவதால், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பள்ளிகளில், புதர்களை அகற்ற எவரும் முனைப்பு காட்டுவதில்லை. எனவே, அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு வாயிலாக பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை