ஏற்றுமதி நிறுவனம் மூடல் தொழிலாளர்கள் அதிர்ச்சி
அன்னூர்: அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் வீடு, ஓட்டல், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கான அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 100 சதவீதம் ஏற்றுமதி செய்து வந்த இந்த நிறுவனம், திடீரென நேற்று முன்தினம் மூடப்பட்டது. அதிர்ச்சி அடைந்த, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவனத்தின் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் கோவையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.