உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊழியரிடம் பணம் பறிப்பு

ஊழியரிடம் பணம் பறிப்பு

கோவை :ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 38. குனியமுத்தூரில் தங்கி டாஸ்மாக் மதுக்கடையில் சப்ளையராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பிரபாகரன், டாஸ்மாக் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த வாலிபர், மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினார். கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.200 பறித்து தப்பினார். புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பணத்தை பறித்தது, கோவையில் தங்கி பணிபுரிந்து வரும் சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா, 39 எனத் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை