உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசாருக்கு கண், குடல் பரிசோதனை முகாம்

போலீசாருக்கு கண், குடல் பரிசோதனை முகாம்

கோவை;கோவை விழாவின் ஒரு பகுதியாக, மாநகர போலீசாருக்கு கண், குடல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.கோவை விழாவின், 16வது பதிப்பு நேற்று துவங்கி, வரும், 8ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, தனியார் மருத்துவமனைகள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மாவட்ட சுகாதார துறை சார்பில், சுகாதார முகாம்கள் நடத்தப்படுகின்றன.முகாம்களில் புற்றுநோயியல், இருதயவியல், எலும்பியல், நுரையீரல், நீரிழிவு, கால், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக, நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, குடல் பரிசோதனை முகாம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார். ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ