உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை கண் சிகிச்சை இலவச முகாம்

நாளை கண் சிகிச்சை இலவச முகாம்

வால்பாறை; வால்பாறையில், நாளை இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கிறது.தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆனந்தம் அறக்கட்டளை டிரஸ்ட் மற்றும் பொள்ளாச்சி ஐ பவுடேசன் கண் மருத்துவமனை இணைந்து, வால்பாறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறது.வால்பாறை அடுத்துள்ள, சேடல்டேம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில், நாளை (17ம் தேதி) காலை, 10:30 மணி முதல், மதியம் 2:30 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.முகாமில், கண்புரை, மாறுகண், நீரழுத்தநோய், மாலைக்கண்நோய், துாரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.முகாமிற்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை