உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேஸ் ஐடி பயோமெட்ரிக் ஆப் பதிவு நிறைவு ஜி.ெஹச்.,ல் செயல்படுத்த ஆயத்தம்

பேஸ் ஐடி பயோமெட்ரிக் ஆப் பதிவு நிறைவு ஜி.ெஹச்.,ல் செயல்படுத்த ஆயத்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், 'பேஸ் ஐடி' வாயிலான 'பயோமெட்ரிக் ஆப்' பதிவுக்கான பணிகள், முழுமை பெற்றுள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம், 13,211 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.இங்கு, டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், டெக்னீசியன்கள், நிர்வாக பணியாளர்கள், டிரைவர்கள் என, பிரிவுகளில் பணிபுரிகின்றனர். இவர்களின் வருகை, பதிவேட்டில் கையொப்பம் இட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு, பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயமாக்க மருத்துவப் பணிகள் இயக்ககம் உத்தரவிட்டது.பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில், பணிபுரியும் பணியாளர்களின் பெயர், துறை, வரிசை எண், முகம், பணிபுரியும் இடம் உள்ளிட்ட முக்கிய தரவுகளை ஆன்லைனின் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.அவரவர், மொபைல் போனில் 'பயோமெட்ரிக் ஆப்' பை பதிவிறக்கம் செய்தும், 'பேஸ் ஐடி' பதிவு செய்யப்பட்டது. அதில், ஏதேனும் பதிவு கோளாறு ஏற்பட்டால் அதற்கு மாற்றாக, மருத்துவமனையில் 'லேப்டாப்' வாயிலாக 'பேஸ் ஐடி' பதிவு செய்வதற்கான பணியும் முழுமை பெற்றுள்ளது.மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:'பேஸ் ஐடி' வாயிலான 'பயோமெட்ரிக் ஆப்' பதிவுக்கான பணிகள் முழுமை பெற்றுள்ளது. இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது,டாக்டர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, அனைவரும், குறித்த நேரத்தில், பணிபுரியும் மருத்துவமனையில் இருந்து, 'பேஸ் ஐடி' வாயிலாக, தினமும் தங்களது வருகையை உறுதிப்படுத்த வேண்டும்.அதன் பின், ஏதேனும் ஒரு தேவைக்காக, மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல வேண்டுமெனில், அதற்கான காரணத்தையும் 'பேஸ் ஐடி' வாயிலாக பதிவு செய்து செல்ல வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை