உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரம் விழுந்து அஞ்சல் அலுவலக காம்பவுண்ட் சுவர் சேதம்

மரம் விழுந்து அஞ்சல் அலுவலக காம்பவுண்ட் சுவர் சேதம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகத்தில் இருந்த, மிகவும் பழமையான மரம் விழுந்ததில், காம்பவுண்டு சுவரும், வேனும் சேதம் அடைந்தன. மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் முன்பு, மிகவும் பழமையான மே பிளவர் மரங்கள் வரிசையாக உள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை, அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய மே பிளவர் மரம் அடியோடு முறிந்து, காம்பவுண்ட் சுவற்றின் மீதும், வெளியே நிறுத்தி இருந்த வேன் மீதும் விழுந்தது. இதில் காம்பவுண்ட் சுவர் முற்றிலும் சேதம் அடைந்தது. மாருதி ஆம்னி வேனும் சேதம் அடைந்தது. அஞ்சல் அலுவலகம் முன்பு கடைகள் இருந்தன. அதிகாலை நேரத்தில் மரம் விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பகலில் மரம் விழுந்திருந்தால் கடையில் இருந்தவர்கள் இதில் சிக்கி இருப்பார்கள். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், அஞ்சலக அலுவலகம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கீழே விழுந்த மரத்தை அகற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என, அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ