உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: இ.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்: இ.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: ஈஷா யோகா மையம் மற்றும் அதன் நிறுவனர் சத்குரு மீது, அவதுாறு பரப்பும் நபர்களை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில், நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது: ஈஷா யோகா மையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, சமூக பணிகளை செய்து வருகிறது. அதன் நிறுவனர் சத்குரு, மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக உதவி வருகிறார். மக்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி, கிராம மேம்பாடு உள்ளிட்டவற்றை அளித்து வருகிறார். இந்திய அளவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு, சேவையாற்றி வரும் மாமனிதர் சத்குரு. அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியினால், கம்யூ., மற்றும் திராவிட கட்சிகள் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால், உண்மையாகிவிடாது. தமிழக அரசுக்கு ஈஷா வாயிலாக பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. பல தி.மு.க., அமைச்சர்கள் ஈஷாவின் சேவைகளை பாராட்டியுள்ளனர். ஆனால், தி.மு.க.,வினரால் காப்பாற்றப்படும் ஒரு சில அமைப்புகள், நபர்கள் இது போன்ற அவதுாறுகளை பரப்பி வருகின்றனர். சத்குரு குறித்து தவறாக பேசுவதை, தமிழக அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது. சத்குரு மற்றும் ஈஷா யோகா மையத்திற்கு களங்கம் விளைவித்தால், இந்து மக்கள் கட்சியினர் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகன், அமைப்புக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, அமைப்புக்குழு பொது செயலாளர் செந்தில், மாவட்ட பொது செயலாளர் சூர்யா, மாநில இளைஞரணி செயலாளர் ஓம்கார் பாலாஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சம்பர
அக் 29, 2024 07:00

ஆர்ப்பாட்டம் பத்தாது


Venkatesh
அக் 28, 2024 22:45

மோகன் . என்கிற ஊ₹பிக்கு போட்ட பதில் இது


Venkatesh
அக் 28, 2024 22:16

இது பொழப்பு இல்லாம..... மானங்கெட்ட 200 ரூபாய் ஊ₹பி பொழப்பு தான் பிடிக்குதா..... அது சரி வந்த வழி அப்படி...ஈவெரா சொன்ன 21 பக்க கழகக்காரன்களில் ஒருவன் நீங்கள்..


Sriram
அக் 28, 2024 11:30

காணமல் போனவர்கள் ஆறு பேர் அதில் ஐவரை காவல்துறையினர் கண்டுப்பிடித்து வழக்கை முடித்து விட்டனர். ஒருவரை தேடிக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈஷாவில் பயிற்சிகாகவோ சுற்றி பார்க்கவோ வந்து தங்களது வீட்டிற்கு தெரிவிக்காமல் வெளியே இருந்தவர்கள். இதனை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவலில் சொல்லி உள்ளனர்.


கிஜன்
அக் 28, 2024 10:06

அங்கு சென்ற நெறய பேர்களை காணவில்லை என அவர்களே கூறுகிறார்கள் .... மர்மதேசம் போல ...


Sriram
அக் 28, 2024 11:14

இது தான் பொய் செய்தியை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாகவே முயல்வது. தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் கூறிய தகவல் 6 பேர் இதுவரை காணமல் போய் உள்ளனர் அதில் 5 பேர் கண்டுப்பிடித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஒருவரை தேடுகிறோம். இவர்கள் அனைவரும் ஈஷாவை சுற்றி பார்க்கவோ / பயிற்சிக்காகவோ/ சேவை செய்வதற்கோ செல்லுவதாக தங்கள் குடும்பத்தில் சொல்லிவிட்டு மிக மிக தாமதமாக தங்கள் இல்லம் திரும்பியவர்கள்.


sridhar
அக் 28, 2024 12:30

காருண்யாவுல படிக்கப்போன நிறைய பேர் உருப்படாம போயிட்டாங்களாமே .


mohan v
அக் 28, 2024 09:19

இதெல்லாம் ஒரு பொழப்பு.


Dharmavaan
அக் 28, 2024 07:59

இது போல் பல தெருமுனை கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் அதுவே ஹிந்துக்களுக்கு ஆதரவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை