மேலும் செய்திகள்
காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் விவசாயி காயம்
11-Mar-2025
மேட்டுப்பாளையம்; கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர் சேதமடைவது தொடர்கிறது. இந்நிலையில், வெளியங்காடு அருகே காட்டுப்பன்றி சாலையின் குறுக்கே வந்ததால், விவசாயி ஒருவர் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார்.கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு அருகே சுண்டக்கரை பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி, 56. விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுண்டக்கரை சாலை வழியாக சென்றபோது, புதரில் மறைந்து இருந்த, காட்டுப்பன்றி சாலையின் குறுக்கே வந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கருப்புசாமி, பலத்த காயம் அடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.காரமடை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.---
11-Mar-2025