உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  உழவர் தொடர்பு அலுவலர் திட்ட அரசாணை வெளியீடு

 உழவர் தொடர்பு அலுவலர் திட்ட அரசாணை வெளியீடு

: வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட நான்கு துறைகளை ஒருங்கிணைத்து, 'உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0' (ஐ.ஏ.டி.டி) அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி, வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள், 'வேளாண் விரிவாக்க அலுவலர்' என்ற பெயரில், 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். வேளாண் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வருவதில், வேளாண் துறை இயக்குனரகம் உறுதியாக இருக்கிறது. பணியிட மாற்றம் தொடர்பான நடவடிக்கையில் இயக்குனரகம் ஈடுபட்டு வருகிறது. இம்மாதம் சம்பள பட்டுவாடா பணிகள் முடிந்த பின், 'டிரான்ஸ்பர்' நடவடிக்கை வேகமெடுக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக கள அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து, அதிகாரிகள் மட்டத்திலான பணியிடங்களும் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி