உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாமாயில் சுங்க வரி குறைப்பு; விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

பாமாயில் சுங்க வரி குறைப்பு; விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

சோமனுார்; கச்சா பாமாயில், சூரிய காந்தி எண்ணெய்க்கு சுங்க வரி குறைக்கப்பட்டதற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:உணவு உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு அடைந்தாலும், சமையல் எண்ணெய் தேவைகளுக்கு, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட வெளி நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. அந்நாடுகளில் இருந்து, 50 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தாமல், வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது, பாமாயில், சூரிய காந்தி, சோயா கச்சா எண்ணெய் களுக்கான சுங்க வரியை, 20 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. குறைக்கப்பட்ட இறக்குமதி வரியை, மீண்டும் உயர்த்த வலியுறுத்தி, நாளை(12ம் தேதி) காலை, 10:00 மணிக்கு சோமனுார் பவுர் ஹவுஸ் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ