உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேங்காய்க்கு அதிக விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய்க்கு அதிக விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

அன்னுார்; ஏலத்தில் தேங்காய்க்கு அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று வாராந்திர வேளாண் விளை பொருள் ஏல விற்பனை நடந்தது.இதில் ஏழு குவிண்டால் எடையுள்ள 1,540 தேங்காய்கள் ஏலத்திற்கு வந்திருந்தன. ஒரு கிலோ குறைந்த விலை 46 ரூபாய் 50 காசு முதல், அதிகபட்சமாக 50 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் தேங்காய் கொப்பரை ஒரு கிலோ குறைந்தபட்சம் 100 ரூபாய் 20 பைசா முதல், அதிகபட்சமாக 175 ரூபாய் 50 பைசா வரை விற்பனையானது. தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி