உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளின் வழித்தட பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு

விவசாயிகளின் வழித்தட பிரச்னை கலெக்டரிடம் முறையிட முடிவு

சூலுார் : வாரப்பட்டியில் விவசாயிகளின் வழித்தட பிரச்னை குறித்து கலெக்டரை சந்தித்து முறையிட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அடுத்த வாரப்பட்டியில், 370 ஏக்கர் பரப்பளவில், 260 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு சாலை அமைக்கும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் வழித்தடத்தை உறுதி செய்து விட்டு பணிகள் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன.இதையடுத்து, இப்பிரச்னை குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., கூறுகையில்,விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின், டிட்கோ அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சருக்கும் மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ