உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீர்க்கங்காய் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

பீர்க்கங்காய் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில் ஆங்காங்கே தற்போது பந்தல் காய்கறிகள் சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இதில், பகவதிபாளையத்தில் பீர்க்கங்காய் சாகுபடி ஆரம்பமாகியுள்ளது. இதுகுறித்து விவசாயி கிரி கூறியதாவது: 40 சென்ட் நிலத்தில் பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் நடவு செய்து 25 நாட்கள் ஆகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் காய்ப்பு துவங்கி விடும். 15 முறை காய் பறிக்கலாம். இதில், 6 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது வரை, உரம், ஆட்கள் கூலி, மருந்து, பந்தல் மேலாண்மை என, 35 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையானால் மட்டுமே விவசாயிக்கு கட்டுபடியாகும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை