மேலும் செய்திகள்
தமிழக விவசாயிகள்சங்க கொடியேற்று விழா
07-Jan-2025
அன்னுார்; தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின், 100வது பிறந்தநாள் விழா நாளை (6ம் தேதி) நடக்க உள்ளது.வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நாளை (6ம் தேதி) கண்காட்சி மற்றும் மாநாடு நடக்கிறது. சங்க மூத்த நிர்வாகிகள், தியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகின்றனர்.நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்படுகிறது. விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், பொருளாதார நிபுணர் அத்தப்பா மாணிக்கம், வேளாண் பல்கலை மேலாண்மை குழு உறுப்பினர் சோமசுந்தரம், வேளாண் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்த விழா குறித்த பிரசாரம் அன்னூரில் நடந்தது. இதில் கோவை மாவட்ட தலைவர் தண்டபாணி, பொருளாளர் ரங்கநாதன், அன்னூர் வட்டார அமைப்பாளர் இளையராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி, நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
07-Jan-2025