உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் விவசாயிகள் மனு

சிட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் விவசாயிகள் மனு

கோவை; விவசாயிகள் வங்கியில் விவசாயக் கடனுதவி பெற ஏதுவாக 'சிட்டா'வில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் வலியுறுத்தினர்.அவர்கள் அளித்த மனு:தமிழக அரசின், 'தமிழ் நிலம் ' என்ற செயலி மூலம், இலவசமாக பட்டா, சிட்டா போன்ற விபரங்களை பதிவிறக்கம் செய்து, பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.அதில், சிட்டாக்களின், குறிப்பு கலங்களில், 'நத்தம் தூய ஆவணங்களை பார்' என்ற வாசகம் பதிவாகியுள்ளது. இந்த சிட்டாக்களை, பத்திரப்பதிவு துறையில் பயன்படுத்த முடியவில்லை.வங்கிகளில், கடனுதவி பெற விவசாயிகள் முயற்சித்த போது, மேற்கண்ட வாசகங்களை நீக்கிவருமாறு, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.இதனால் விவசாயிகள் கடனுதவி பெற முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும், இன்னலுக்கும் ஆளாகின்றனர். ஆகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிட்டாக்களில், எவ்விதமான அறிவிப்பு மற்றும் வேண்டுகோள் இல்லாமலும், இது போன்ற வாசகங்கள் இல்லாமலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி, விண்ணப்பங்களை பெற்று, பதிவாகியுள்ள சிட்டாக்களில், திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனுவை, பரிசீலனை செய்த வருவாய் துறை அதிகாரிகள், மேல் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மிக விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சிட்டாக்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை