உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு  விரைவாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

 விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு  விரைவாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை: விவசாயிகளுக்கு தட்கல் முறையில், விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: விவசாய மின் இணைப்பை தட்கல் முறையில் வழங்குவதை, விவசாய சமுதாயமே வரவேற்கிறது. தட்கல் விவசாய மின் இணைப்புக்கு இன்றைக்கு விண்ணப்பித்தால் நாளைக்கு மின் இணைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோவையிலுள்ள ஏராளமான விவசாயிகள் 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை, மின்வாரியத்துக்கு பணம் செலுத்தி, மின் இணைப்புக்காக காத்திருக்கிறோம். ஆனால் தட்கல் விவசாய மின் இணைப்பு வழங்க, மின்வாரியத்துக்கு காலக்கெடு ஏதுவும் நிர்ணயம் செய்யாதது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்த குறுகிய காலத்தில், 600 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு வசூலான நிலையில், மின் இணைப்பு கிடைக்க தாமதமாகும் என்ற நிலைப்பாடு, விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், தட்கல் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, தாமதம் இன்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி