உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடத்தை நிரப்புங்க!

அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடத்தை நிரப்புங்க!

வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் தலைமை மருத்துவர் டாக்டர் நித்யா தலைமையில் நடந்தது.கூட்டத்தில், வால்பாறை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய மருத்துவமனையை புதுப்பித்து உள்நோயாளிகள் பயன்பாட்டிற்காக மீண்டும் பயன்படுத்த வேண்டும்.காலிப்பணியிடங்களால் பணிச்சுமை அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வால்பாறை நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உதயம், நோயாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ