பாலக்காடு:லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவில் இறுதி கட்ட வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கேரள மாநில தேர்தல் ஆணையம் இறுதி கட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத்தில் மொத்தம், 2 கோடியே 70 லட்சத்து, 99 ஆயிரத்து 326 வாக்காளர்கள் உள்ளதாகவும், புதிய வாக்காளர்களாக, 5.75 லட்சம் பேர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் மேலும் கூறியிருப்பதாவது:கேரள மாநிலத்தில், ஒரு கோடியே, 39 லட்சத்து, 96 ஆயிரத்து 729 பெண் வாக்காளர்களும்; ஒரு கோடியே, 31 லட்சத்து, இரண்டாயிரத்து, 288 ஆண் வாக்காளர்களும்; 309 பேர் மூன்றாம் பாலினத்தாவர்களும் உள்ளனர்.வாக்காளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் மலப்புரம் (32,79,172). குறைந்த வாக்காளர்கள் உள்ள மாவட்டம் வயநாடு (6,21,880). புலம்பெயர்ந்த வாக்காளர்கள், 88,223 பேர். மாநிலத்தில் மொத்தம், 25,177 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.பட்டியலில் பெயர் சேர்க்க முடியாதவர்களுக்கு தேர்தலுக்கு முன் வரை விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. புதிதாக, 17.1 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.