இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
கோவை ;ஜன., முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளும் பணி, அக்., நவ., டிச., ஆகிய மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்டது.மொத்தம் 1,44,000 மனுக்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் வந்தன. அம்மனுக்களை பரிசீலனை செய்து, களஆய்வு மேற்கொண்டு உறுதியான தகவல்களை இறுதி செய்து, அவற்றை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் பிரிவு பணியாளர்கள் மேற்கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிராந்திகுமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், இன்று காலை 10:00 மணியளவில் வெளியிடுகிறார்.