உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

தொண்டாமுத்தூர்; விராலியூரில், காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி நிதியுதவி வழங்கினார். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி, பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம், காட்டு யானை தாக்கி, சவுக்காட்டுபதியை சேர்ந்த செல்வி,23 மற்றும் விராலியூரை சேர்ந்த ரத்தினா,53 ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வின்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை